ஆப்நகரம்

ஹர் கோவிந்த் குரோனாவின் பிறந்த நாளை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்!

பிரபல மூலக்கூறு உயிரியல் அறிவியலாளரான, ஹர் கோவிந்த் குரோனாவின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 9 Jan 2018, 11:25 am
பிரபல மூலக்கூறு உயிரியல் அறிவியலாளரான, ஹர் கோவிந்த் குரோனாவின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil google doodle honors the har gobind khorana
ஹர் கோவிந்த் குரோனாவின் பிறந்த நாளை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்!


அமெரிக்க வாழ் இந்தியரும், மூலக்கூறு உயிரியல் அறிவியலாளருமான ஹர் கோவிந்த் குரோனா, 1922ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்தார். தன்னுடைய கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த குரோனா அதன்பின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார்.

1945ஆம் ஆண்டு வேதியியல் பிரிவில் முதலிடம் பெற்ற குரோனா அதன்பின் இங்கிலாந்தின் லீவர்புல் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சுவீட்சர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வினை மேற்கொண்ட குரோனா 1949ல் மீண்டும் இந்தியா திரும்பினார்.

மீண்டும் இங்கிலாந்து திரும்பிய இவர் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றிய இவர், மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார்.

மூலக்கூறு உயிரியலில் குரோனாவின் பங்களிப்பை பாராட்டி இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. தன் வாழ்நாளை மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்காக அர்ப்பணித்த குரோனா இறுதியில் 2011 ஆம் ஆண்டு காலமானர். இன்று குரோனாவின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி