ஆப்நகரம்

அரசு ஆசிரியர் பணியிடை நீக்கம் - மாணவர்கள் மண்டியிட்டு போராட்டம்

அரசு பள்ளி கணித ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Samayam Tamil 9 Sep 2018, 1:00 pm
அரசு பள்ளி கணித ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
Samayam Tamil students


கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் எடுக்கும் ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீது புகார் எழுந்ததை அடுத்து அவரை விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆசிரியர் ஜெயபிரகாஷின் பணி இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த காவலர்கள் மற்றும் வட்டாச்சியர் பள்ளிக்கு வந்து மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் பேசுவதாக தெரிவித்தார்.

மாவட்ட கல்வி அலுவலர் மகேஷ் கூறுகையில், வேண்டுமென்றே மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்