ஆப்நகரம்

வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்ற சேவை பற்றி மத்திய அரசு விசாரணை

வாட்ஸ் ஆப் நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள பாதுகாக்கப்பட்ட ரகசிய தகவல் பரிமாற்ற சேவை தொடர்பாக, விசாரணை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

CNN 20 Apr 2016, 3:51 pm
வாட்ஸ் ஆப் நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள பாதுகாக்கப்பட்ட ரகசிய தகவல் பரிமாற்ற சேவை தொடர்பாக, விசாரணை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil govt starts investigation over whatsapp encrypted service
வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்ற சேவை பற்றி மத்திய அரசு விசாரணை


சமூக ஊடகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் வாட்ஸ் ஆப், என்கிரிப்டட் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக, வாட்ஸ் ஆப் பயனாளர்கள் பகிரும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை மற்றவர்கள் பார்வையிட அனுமதி கிடையாது. ஒருவேளை தீவிரவாதிகள் போன்றோர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம் செய்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

எனவே, வாட்ஸ் ஆப் சேவை என்பது, நாட்டின் பாதுகாப்புக்கு சவால் விடக்கூடியதாக, உருவெடுத்துள்ளது. இதனால், அதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் சேவை பற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் விசாரணை நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய தொலைத்தொடர்புச் சட்டப்படி, 100 சதவீதம் முழுமையான என்கிரிப்டட் மெசேஜ் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சேவை தொடர்பாக, விரிவான விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று, தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி