ஆப்நகரம்

கெத்து தாத்தா; கிணற்றில் தவறி விழுந்து, 3 நாளுக்கு பின் பாதுகாப்பாக மீட்பு!

கிணற்றில் தவறி விழுந்த முதியவர், 3 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

TNN 30 Sep 2017, 2:05 pm
திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த முதியவர், 3 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil granpa rescued safely after 3 days in well
கெத்து தாத்தா; கிணற்றில் தவறி விழுந்து, 3 நாளுக்கு பின் பாதுகாப்பாக மீட்பு!


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜூலு(74). நான்கு நாட்களுக்கு முன், வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் முகூர் கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் ஒரு நபரின் குரல் கேட்டுள்ளது. இதைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், முதியவரை கயிறு மூலம் மீட்டனர். இதையடுத்து அவர் காணாமல் போன ரங்கராஜூலு என்பது தெரியவந்தது.

அவர் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மூன்று நாட்களாக எந்தவித உணவும் இன்றி, முதியவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Granpa rescued safely after 3 days in Well.

அடுத்த செய்தி