ஆப்நகரம்

செக்ஸ் மீதான நாட்டம் குறைந்து வரும் விசித்திர நாடு!

செக்ஸ் மீதான நாட்டம் குறைந்து வரும் விசித்திர நாடு!

TOI Contributor 16 Feb 2017, 10:12 am
டோக்கியோ : நிறைவான செக்ஸ் வாழ்க்கை தான் தம்பதிகளுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும் என உலகில் உள்ள அனைவராலும் நம்பப்படுகிறது. மேலும் திருமணமான தம்பதிகள் வாரத்திற்கு ஒரு முறை செக்ஸ் வைத்துக்கொள்வது உகந்தது என்று செக்ஸ் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஒப்பீட்டளவில் முந்தைய தலைமுறையைவிட இந்த தலைமுறையினர் செக்ஸ் மீது விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். இதற்கும் ஒரு படிமேலாக ஜப்பானில் உள்ள தம்பதிகள் தங்களின் செக்ஸ் வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டனர் என்றே சொல்லலாம்.
Samayam Tamil half of all married couples in japan havent had sex in over a month
செக்ஸ் மீதான நாட்டம் குறைந்து வரும் விசித்திர நாடு!


சமீபத்திய புள்ளிவிவரப்படி ஜப்பானில் உள்ள திருமணமான தம்பதிகளில் 50 சதவீதத்தினர் ஒரு மாதத்திற்கும் மேலாக செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் 22 சதவீத பெண்கள் செக்ஸ் வெறுப்பூட்டுகிறது என்றும், 35 சதவீத பெண்கள் உடலுக்கு சோர்வை தருகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 18 வயது முதல் 34 வயது வரை உள்ள தனி ஆண் மற்றும் தனி பெண்களில் முறையே 42 மற்றும் 44 சதவீதத்தினர் செக்ஸ் வைத்துக்கொண்டதில்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. உலகிலேயே அதிகம் செக்ஸ் வீடியோ தயாரிப்பவர்களின் நாட்டில் இது போன்று நடப்பது விசித்திரமாக உள்ளது.

அடுத்த செய்தி