ஆப்நகரம்

மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை!!

புதுக்கோட்டை மாவட்டம் வளைகொலை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில், புதிதாக பணியமர்த்தப்பட்ட தலைமையாசிரியை மாணவர்களை சேர்த்து பள்ளிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 21 Jun 2018, 1:35 pm
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் வளைகொலை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில், புதிதாக பணியமர்த்தப்பட்ட தலைமையாசிரியை மாணவர்களை சேர்த்து பள்ளிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார்.
Samayam Tamil மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை!!
மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை!!


தமிழக அரசு மாணவர்கள் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது. இதனால், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வளைகொலையில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமையாசிரியையாக ஜோதிக்கும், அந்தக் கிராமத்து மக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால், கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்பாமல் வெளியில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பினர்.

இதனால், அந்தப் பள்ளியில் மாணவர்கள்யாரும் சேராததால், அந்தத் தலைமையாசிரியை பணியிடம் மாற்றப்பட்டு, ஆரோக்கிய மேரி என்ற புதிய தலைமையாசிரியை பணியமர்த்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆரோக்கியமேரி ஊர் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்துப் பேசி பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவரின் முயற்சியால், தற்போது பள்ளியில் 12 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். அதை இந்த வாரத்திற்குள் 50 ஆக உயர்த்தவும் தலைமையாசிரியை ஆரோக்கியமேரி திட்டமிட்டுள்ளார்.

மாணவர்கள் அதிகப்படியாக சேரும் பட்சத்தில், அவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தலைமையாசிரியை ஆரோக்கியமேரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி