ஆப்நகரம்

மதம் கிடக்குது.. உயிர் தான் முக்கியம்: கணவர்மார்களை காப்பாற்றிய உ.பி பெண்கள்

மனித உடலில் ஓடும் ரத்தத்திற்கு எந்தவித பாகுபாடும் இல்லை என்பதற்கு சான்றாக சிறுநீரகத்தை தானமாக வழங்கி இந்து மற்றும் இஸ்லாமிய பெண்கள் தங்களது கணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

Huffington Post India 23 May 2017, 12:24 pm
நொய்டா: மனித உடலில் ஓடும் ரத்தத்திற்கு எந்தவித பாகுபாடும் இல்லை என்பதற்கு சான்றாக சிறுநீரகத்தை தானமாக வழங்கி இந்து மற்றும் இஸ்லாமிய பெண்கள் தங்களது கணவர்களை காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil how a hindu and a muslim woman saved each others husbands in uttar pradesh
மதம் கிடக்குது.. உயிர் தான் முக்கியம்: கணவர்மார்களை காப்பாற்றிய உ.பி பெண்கள்


கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த இக்ராம்(29) மற்றும் பாக்பாத் பகுதியைச் சேர்ந்த ராகுல் வரிஷத்(26), ஆகியோர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில், மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், இருவரது குடும்பத்தினரின் ரத்த வகையும் மாறுபட்டிருந்ததால் அவர்களால் சிறுநீரகம் தானம் செய்ய இயலவில்லை. இக்ராமின் மனைவி ராசியா(24) என்பவரது ரத்த வகை (பி+), ஆனால் இக்ராம் (ஏ+), இதேபோல், ராகுலின் மனைவி பவித்ராவுக்கு (ஏ+) மற்றும் ராகுலுக்கு (பி+).

இதனை அறிந்த மருத்துவ குழுவினர் இரு குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருவரது மனைவியின் சிறுநீரகம் மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் 2 பேரின் உயிரையும் காப்பாற்றலாம் என கூறியதையடுத்து, இரு குடும்பத்தினரும் சிறுநீரகம் தானம் செய்ய ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் இந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. மனிதர்கள் தான் மதம், ஜாதி என கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர், ரத்தத்துக்கு எவ்வித பாகுபாடுமில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Human blood holds no narrow sectarian boundaries, was proved when a Hindu and a Muslim woman donated one of their kidneys to the other's husband at a hospital in Noida.

அடுத்த செய்தி