ஆப்நகரம்

நிலத்தில் தண்ணீர் இருக்கிறதா? எப்படி அறிவது?

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வாறு கிணறு வெட்டினார்கள் என்று பார்ப்போம்.

TOI Contributor 14 Mar 2017, 10:19 am
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வாறு கிணறு வெட்டினார்கள் என்று பார்ப்போம்.
Samayam Tamil how to find out the water in the ground
நிலத்தில் தண்ணீர் இருக்கிறதா? எப்படி அறிவது?


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலரின் உழைப்பில் தோண்டிய கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால், அத்தனை பேரின் உழைப்பும் பாழாகி விடுகிறது. மேலும், பண விரயமும் ஏற்படுகிறது. அப்படி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் . சரி நல்ல தண்ணீரும் கிடைத்துவிட்டது.

கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று பர்ர்க்க வேண்டாமா?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும்பசுக்களை அந்த நிலத்திதில் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். இனி இதுமாதிரி நீங்களும் செய்து பார்க்கலாமே.

how to find out the water in the ground

அடுத்த செய்தி