ஆப்நகரம்

வீடு கட்ட பணம் கொடுக்கும் பி.எப் திட்டம் மார்ச் முதல் துவக்கம்

பி.எப்., உறுப்பினர்கள் வீடுகட்ட எளிய முறையில் பணம் பெறும் திட்டம், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது.

TNN 25 Feb 2017, 6:09 pm
புதுடெல்லி: பி.எப்., உறுப்பினர்கள் வீடுகட்ட எளிய முறையில் பணம் பெறும் திட்டம், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது.
Samayam Tamil how to use your provident fund to finance a home purchase
வீடு கட்ட பணம் கொடுக்கும் பி.எப் திட்டம் மார்ச் முதல் துவக்கம்


4 கோடி உறுப்பினர்கள்:
இ.பி.எப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்களின் பணம், அவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.

மார்ச் முதல்:
பி.எப் செலுத்தும் உறுப்பினர்களில், வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறுவதைப் போல, வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், வீடு கட்ட தேவையான பணத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டு, மாத தவணையாக அதை திருப்பி செலுத்தும் புதிய திட்டத்தை இ.பி.எப் அளிக்க உள்ளது. இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி