ஆப்நகரம்

ஓட்டை வழியாக ஜிம்மிற்குள் விழுந்து 2 நாட்கள் பதுங்கியிருந்த பெரிய பாம்பு!

ஓட்டை வழியாக ஜிம்மிற்குள் விழுந்து 2 நாட்கள் பதுங்கியிருந்த பெரிய பாம்பு!

TOI Contributor 21 Apr 2017, 9:38 pm
ஆஸ்திரேலியா : வாகன் எனும் பெண் போக்வா சி.க்யூ. எனும் ஜிம்மை நடத்திவருகிறார். ஜிம்மின் மேற்கூரையில் ஓட்டை இருப்பதை பார்த்த வாகன், போசம் (Possum – ஆஸ்திரேலியாவில் உள்ள எலி போன்ற பிராணி) எனும் சிறு பிராணி தான் உள்ளே வந்திருப்பதாக நினைத்து அலட்சியமாக விட்டுவிட்டார். ஏனென்றால் அவரது ஜிம்மில் போசம் தொல்லை அதிகம் உள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜிம்மை சுத்தம் செய்பவர் அலறி அடித்து வாகனிடம் ஓடி வந்துள்ளார். ஜிம் உள்ளே மிகப்பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக கூறியிருக்கிறார்.
Samayam Tamil huge snake falls through ceiling spends 2 days undetected
ஓட்டை வழியாக ஜிம்மிற்குள் விழுந்து 2 நாட்கள் பதுங்கியிருந்த பெரிய பாம்பு!


வாகன் உள்ளே சென்று பார்க்கும் பெரிய பாம்பு ஒன்று படுத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து சமூக வலைதளத்தில் வாகன் பதிவிட்டு உள்ளார். பாம்பின் புகைப்படத்தை பதிவேற்றி, கடந்த இரண்டு நாட்களாக பாம்பு எங்கு இருந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் நான் ஜிம்மில் வகுப்பு எடு்த்தேன், ஆனால் என் கண்ணில் படவே இல்லை. எங்கு ஒளிந்து இருந்தது என்று தெரியவில்லை. போசம் சாப்பிட்டுவிட்டு மிகவும் பெரிதாக இருந்ததால் பாம்பினால் நகரமுடியவில்லை என்றும் வாகன் கூறியிருந்தார். பாம்பு அங்கிருந்து பத்திரமாக கொண்டு செல்லப்பட்டுவிட்டதையும் வாகன் குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த செய்தி