ஆப்நகரம்

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை தொடர்ந்து வழங்கக்கோரி பெண்கள் போராட்டம்!

தமிழக அரசால் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்க கேட்டு கன்னயாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 10 Jan 2019, 3:00 pm
தமிழக அரசால் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்க கேட்டு கன்னயாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil vlcsnap-2019-01-10-14h56m28s491


பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கரும்பு உள்ளிட்ட பொங்கலுக்கான பொருட்களும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பொருட்களை வாங்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்குமாறும் ஏனைய குடும்பங்களுக்கு வழங்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், ரேஷன் கடைகளில் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் திரண்டிருந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு பணமோ பொங்கல் பொருட்களோ வழங்காததால் திடீரென திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த இரணியல் போலீசார் சாலையில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி