ஆப்நகரம்

எயிட்சால் பாதிக்கப்பட்ட சிறுமியை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆதவற்றோர் இல்லம்..!

​ ஹெச்.ஐ.வி எயிட்சால் பாதிக்கப்பட்ட சிறுமியை , கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆதரவற்றோர் இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 23 Apr 2017, 12:15 pm
ஹெச்.ஐ.வி எயிட்சால் பாதிக்கப்பட்ட சிறுமியை , கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆதரவற்றோர் இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil hyderabad orphanage used hiv affected girl to clean the man hole
எயிட்சால் பாதிக்கப்பட்ட சிறுமியை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆதவற்றோர் இல்லம்..!


ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் ஹெச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகள் தங்கியுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் கழிவு நீர் தொட்டியில் இறங்கி, சிறுமி ஒருவர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ காட்சி ஒன்று வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்த சிறுமி ஒருவர், முகத்தில் முகமூடி ஒன்றை அணிந்து கொண்டு அந்த கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வது போலவும் அந்த சிறுமியின் பின்னால் நின்று கொண்டு ஆண் ஒருவர் கட்டளையிடுவது போலவும் காட்சிகள் இருந்தன.

இந்த கொடூரம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் அந்த ஆதரவற்றோர் இல்ல பாதுகாப்பாளரை கேட்ட போது, ”ஹெச்.ஐ.வினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கி இருப்பதால், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வெளியாட்கள் யாரும் வர தயங்குகின்றனர். எனவே இங்கு தங்கியிருக்கும் சிறுமிகளை கொண்டு இந்த வேலைகளை செய்கிறோம்.” என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த தொண்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hyderabad Orphanage used HIV affected girl to clean the Man hole

அடுத்த செய்தி