ஆப்நகரம்

எலக்ட்ரிக் கம்பத்தில் சிறுநீர் கழித்ததில் விபரீதம்; சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரத்தைப் பாருங்க!

10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், விளையாட்டாக செய்த விஷயம் எவ்வளவு விபரீதமாக போய்விட்டது பாருங்கள்.

Samayam Tamil 9 May 2019, 4:33 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஆன்லா துணை மண்டலத்திற்கு உட்பட்ட கணேஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூப் கிஷோர்(15). இவர் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தனது நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.
Samayam Tamil Pees


பின்னர் அனைவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எலக்ட்ரிக் கம்பத்தின் மீது கிஷோர் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சூழலில் சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

உடனே அவனது நண்பர்கள், அருகே நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பிரேம் சிங் என்ற விவசாயியை அழைத்தனர். இதையடுத்து மரக்கட்டையின் உதவியுடன், எலக்ட்ரிக் கம்பத்தில் இருந்து சிறுவனை தனியே இழுத்தனர்.

ஆனால் அதற்குள் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது. உயர் மின்னழுத்தம் பாய்ந்து, சிறுவனின் உடல் எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் போலீசாருக்கும், சிறுவனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

கிஷோரைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். அவர்கள் வீட்டில் பிறந்த 4 குழந்தைகளில் கிஷோர் 3வது நபர் ஆவார். இவர்களது தந்தை ஹுலசி ராம், பஞ்சாபைச் சேர்ந்த தொழிலாளி. பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்த செய்தி