ஆப்நகரம்

தற்கொலையில் இந்தியா முதலிடம்: உலக சுகாதார நிறுவனம்

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 25 Feb 2017, 1:01 am
புதுதில்லி: சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil india is the first place in suicide who
தற்கொலையில் இந்தியா முதலிடம்: உலக சுகாதார நிறுவனம்


இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,88,000 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
India is the first place in suicide: WHO

அடுத்த செய்தி