ஆப்நகரம்

3 வயது மகளுக்கு 100 கோடி சொத்தைக் கொடுத்து ஜெயின் துறவிகளாகும் தம்பதிகள்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களது 3 வயது மகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்து விட்டு, ஜெயின் துறவிகளாக மாற எடுத்து இருக்கும் சம்பவம் அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 16 Sep 2017, 12:34 pm
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களது 3 வயது மகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்து விட்டு, ஜெயின் துறவிகளாக மாற எடுத்து இருக்கும் சம்பவம் அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil jain couple to leave 3 yr old daughter rs 100 cr property for monkhood
3 வயது மகளுக்கு 100 கோடி சொத்தைக் கொடுத்து ஜெயின் துறவிகளாகும் தம்பதிகள்!!


மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகள் சுமித் ரதோர். வயது 35. இவரது மனைவி அனாமிகா, வயது 34. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஜெயின் துறவிகளாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளனர். வரும் செப்டம்பர் 23ஆம் தேதியன்று குஜராத் மாநிலம், சூரத்தில் சுதாமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் முன்பு முதல்கட்டமாக தீக்ஷை பெறுகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் போபாலில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உள்ளது நீமச். இந்த இடத்தை சேர்ந்தவர்களின் தற்போதைய கவலையே, யார் அவர்களது மகளை பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான். ஆனால், அனாமிகாவின் தந்தை அசோக் சாந்தல்யா, ‘’குழந்தையின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள நான் இருக்கிறேன். அவர்கள் இருவரும் தீர்மானித்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மதம் அழைக்கும்போது யாரும் ஒன்றும் செய்ய முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். இவர் நீமச் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருகிறார்.

இதேபோல், சொந்த நிறுவனம் நடத்தி வரும் சுமித்தின் தந்தை ராஜேந்திர சிங் ரதோர் கூறுகையில், ‘’நாங்கள் இதை எதிர்பாத்தோம். ஆனால், இவ்வளவு விரைவில் இருக்கும் என்று நினைக்கவில்லை’’ என்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. குழந்தை பிறந்த 8வது மாதத்தில் இந்த முடிவை எடுத்த தமபதிகள், பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். பள்ளிப் பருவத்தில் அனாமிகா நன்றாக படிக்கு பெண்ணாக இருந்து வந்துள்ளார். 8ஆம் வகுப்பு தேர்வில் தங்க மெடல் பெற்றுள்ளார். பொறியியல் படிப்பு முடித்துள்ளார்.

சுமித்தின் உறவினர் சந்தீப் கூறுகையில், சுமித்துக்கு அனைத்தும் உள்ளது. 100 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. நல்ல மனைவி இருக்கிறார். இருந்தாலும் இந்த முடிவை எடுத்துள்ளார்’’ என்கிறார்.

கடந்த ஜூன் மாதம், குஜராத் மாநில 12ஆம் வகுப்பு தேர்வில் 99.9 சதவீத மதிப்பெண் பெற்று இருந்த 19 வயது மாணவன் வர்ஷில் ஷா ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் தேசிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Jain couple to leave 3-yr-old daughter, Rs 100-cr property for monkhood

அடுத்த செய்தி