ஆப்நகரம்

ஆண் நடிகர்கள் கிடைக்காததால் சரிவில் ஜப்பான் ஆபாசப்படத் துறை..!

ஆபாசப்படங்களில் நடிக்க போதுமான ஆண் நடிகர்கள் கிடைக்காததால்,ஜப்பானின் ஆபாசப்படத் துறை நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.

TNN 2 Nov 2016, 4:32 pm
ஆபாசப்படங்களில் நடிக்க போதுமான ஆண் நடிகர்கள் கிடைக்காததால்,ஜப்பானின் ஆபாசப்படத் துறை நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.
Samayam Tamil japanese porn industry hit by shortage of men
ஆண் நடிகர்கள் கிடைக்காததால் சரிவில் ஜப்பான் ஆபாசப்படத் துறை..!


ஜப்பானில் சுமார் 8000 பெண்களுடன் 7,500-க்கும் மேற்பட்ட ஆபாசப்படங்களில் நடித்த கென் சிமுசு என்பவர், ”உலகில் உள்ள வங்காளப்புலிகளின் எண்ணிக்கையை விட ஜப்பான் ஆபாசப்படத்துறையில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.தற்போதைக்கு 10,000 ஆபாசப்பட நடிகைகளுக்கு,சுமார் 70 நடிகர்களே ஜப்பானில் இருக்கின்றனர்.

ஒரே நடிகர்கள் திரும்ப,திரும்ப ஆபாசப்படங்களில் நடிப்பதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது.இதனால் அவர்கள் ஜப்பானிய ஆபாசப்படங்களை பார்ப்பதை தவிர்க்கிறார்கள்..இந்த சூழலினால் ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் நடைபெறக்கூடிய ஜப்பான் ஆபாசப்பட உலகம் சரிவை சந்தித்து வருகிறது.”என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

வேறு வழியில்லாமல் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஆபாசப்படங்களில் தான் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 17 ஆண்டுகளாக ஆபாசப்படங்களில் நடித்து வருவதாகவும்,தனக்கு 100 வயதாகும் வரை இந்த தொழிலில் ஈடுபடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கென் சிமுசுவின் கருத்தை பிரபல ஜப்பானிய ஆபாசப்பட இயக்குநரான டோஹிஜ்ரோ என்பவரும் ஆமோதித்துள்ளார்.”நான் இந்த துறையில் 27 ஆண்டுகளாக இருக்கிறேன்.தற்போதைய ஆண்கள் தங்கள் செக்ஸ் ஆசையை இழந்துவிட்டனர்.அவர்களின் ஆசை எல்லாமே உணவு உண்பதில்தான் உள்ளது.ஜப்பானிய ஆண்கள் எல்லாரும் மென்மையானவர்களாகிவிட்டார்கள்.என் காலத்தில் ஆண்கள் இப்படி இருந்ததில்லை.”என கொந்தளித்துள்ளார் டோஹிஜ்ரோ.

JAPANESE PORN INDUSTRY HIT BY SHORTAGE OF MEN

அடுத்த செய்தி