ஆப்நகரம்

நெல்லை நகைக் கடை கொள்ளை : ஒருவர் சிறையில் அடைப்பு

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள நகை கொள்ளையில் ஈடுப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

TNN 27 Mar 2017, 10:21 pm
நெல்லை : நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள நகை கொள்ளையில் ஈடுப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Samayam Tamil jewellery robbery nellai one arrest
நெல்லை நகைக் கடை கொள்ளை : ஒருவர் சிறையில் அடைப்பு



நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய சாலையில் அமைந்துள்ள அழகர் ஜூவல்லரி என்ற நகைக்கடையில், மேற்கூரை வழியாக துளையிட்டு 18 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்கம் கடந்த 24-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

அந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவானது. தொடர்ந்து அந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சித்தூர், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த ஐந்து வட மாநிலத்தவர்களிடன் இருந்து அந்த நகை மீட்கப்பட்டது. அப்போது. காரில் இருந்த ஐந்து பேரும் தப்பி வனப்பகுதிக்குள் ஒடினார்கள். காட்டுக்குள் தப்பி ஓடிய ஐவரில் காலித் சேக் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 37 கிலோ தங்க நகைகளும் 7 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

இதனைதொடர்ந்து அந்த காலித் சேக் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி