ஆப்நகரம்

காவிரி வன்முறை: கால் நடையாக தமிழக எல்லைக்குள் வந்த கர்நாடக மருத்துவர்கள்

காவிரி விவகராம் தொடர்பாக தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவி வரும் நிலையில், நடந்தே தமிழக எல்லைக்குள் வந்து கர்நாடக மருத்துவர்கள் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை வழங்கியுள்ளனர்.

TNN 16 Sep 2016, 3:42 pm
பெங்களூர்: காவிரி விவகராம் தொடர்பாக தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவி வரும் நிலையில், நடந்தே தமிழக எல்லைக்குள் வந்து கர்நாடக மருத்துவர்கள் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை வழங்கியுள்ளனர்.
Samayam Tamil karnataka doctors cross tamil nadu border on foot to save mans life
காவிரி வன்முறை: கால் நடையாக தமிழக எல்லைக்குள் வந்த கர்நாடக மருத்துவர்கள்


காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதன் காரணமாக இரு மாநில எல்லைப்பகுதிகளிலும் பதட்டம் நிலவி வருகிறது.

இதனிடையே, பெங்களூர் மணிபால் மருத்துவமனையில் கல்லீரல் செயலிழந்த நோயாளிக்கு, தமிழகத்தில் நடந்த சாலைவிபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த நபரின் கல்லீரல் தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரு மாநில எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவும் சூழலில் துணிச்சலாக முயற்சி எடுத்த மருத்துவர்கள் இரவு நேரத்தில் பயணம் செய்ய முடிவேடுத்தனர்.

இது குறித்து மருத்துவர் ஒலித்செல்வன் கூறுகையில், ஈரோட்டைச் சேர்ந்தவரின் கல்லீரல் தானம் கொடுக்க தயாராக இருந்தது. பெங்களூர் முதல் சேலம் வரையில் 4 மணி நேரம் தான் பயண நேரம். ஆனால், கர்நாடகா மாநில எல்லைப்பகுதியைக் கடந்து தமிழகத்துக்குள் செல்ல இரு நாட்டு எல்லையை கடப்பது போன்று உணர்ந்ததாக கூறியுள்ளார்.

கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்புலன்ஸ் வண்டியில் நோயாளியுடன் புறப்பட்டு தமிழக எல்லைப்பகுதியை கடக்க, அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த நோயாளியை வீல்ச்சேரில் ஏற்றி தள்ளிக் கொண்டே சுமார் 30 நிமிடம் வரை தமிழக எல்லைக்குள் நடந்து வந்து தமிழக பதிவெண் கொண்ட ஆம்புலன்சில் ஏறி சேலம் மணிபால் மருத்துவமனயை அடைந்ததாக மருத்துவர் கூறினார்.

இந்நிலையில், அதிகாலை 3 மணிக்கு சேலம் மருத்துவமனைக்கு வந்தடைந்த மருத்துவர்கள் குழு சுமார் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி