ஆப்நகரம்

இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்!

இறுதிச் சடங்கிற்காக பணம் வைத்துவிட்டு, முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 21 Jun 2018, 11:47 am
மைசூரூ: இறுதிச் சடங்கிற்காக பணம் வைத்துவிட்டு, முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil Last Rites


கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராமகிருஷ்ண நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா(69). இவர் அரசின் எரிசக்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் ஸ்ரீரங்கபட்டணத்தில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்த சூழலில் கடந்த 19ஆம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி கூறுகையில், பல்வேறு உடல்நலக்குறைபாடுகள் காரணமாக, கடந்த சில நாட்களாக ராமகிருஷ்ண மிகவும் மன உளைச்சல் அடைந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

அதனால் தான் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறினர். தனது குடும்பத்திற்கு மிகவும் பாரமாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இவரது பிள்ளையர்கள் நல்ல இடத்தில் வேலை, குடும்பம் என செட்டில் ஆகிவிட்டனர். அவர்களுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார்.

அவருக்கு என்ன விதமான உடல் பாதிப்பு என்று தெரியவில்லை. இருப்பினும் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கடைசியாக எழுதிய கடிதம் மூலம் தெரியவந்துள்ளது. ராமகிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் ஸ்ரீரங்கபட்டிணத்தில் தான் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பானுபிரகாஷ் ஷர்மா என்ற பிரபல சாமியார் தான் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக ரூ.40,000க்கு செக் எழுதி வைத்து விட்டு உயிரிழந்தார்.

Karnataka man hangs himself at lodge, leaves cheque for last rites.

அடுத்த செய்தி