ஆப்நகரம்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மாணவர்கள், தஞ்சை வணிகர்கள் கடையடைப்பு

ஒ,என்.ஜி.சிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கதிராமங்கலத்தில் கல்லூரி மாணவர்கள் களமிறங்கியுள்ளனர், அதோடு தஞ்சை வணீகர்கள் கடையடைப்பு போராட்டம் செய்துவருகின்றனர்.

TNN 11 Jul 2017, 12:49 pm
தஞ்சாவூர் : ஒ,என்.ஜி.சிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கதிராமங்கலத்தில் கல்லூரி மாணவர்கள் களமிறங்கியுள்ளனர், அதோடு தஞ்சை வணீகர்கள் கடையடைப்பு போராட்டம் செய்துவருகின்றனர்.
Samayam Tamil kathiramangalam protest strengthened by students
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மாணவர்கள், தஞ்சை வணிகர்கள் கடையடைப்பு

தஞ்சை மாவட்டம் கதிராங்கலத்தில் 11 இடங்களில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கிறது. கடந்த 30ம் தேதி எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.

இனால் பதற்றம் ஏற்பட்டதால், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்க போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 9 பேரை கைது செய்தனர்.



முழு அடைப்பு;

ஒஎன்ஜிசியின் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் கதிராமங்கலத்தில் வணிகர்கள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் தஞ்சை வணீகர்கள் கடை அடைப்பு போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளது.



மாணவர்கள் போராட்டம்



கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவரகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி