ஆப்நகரம்

பேஸ்புக் செக்ஸ் படங்களை ஒழிக்க களமிறங்கியுள்ள கேரள ஹேக்கர்கள் குழு..!

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் செக்ஸ் படங்களை ஒழிக்கப்போவதாக கேரளாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று அறிவித்துள்ளது.

TNN 3 Feb 2017, 11:34 am
பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் செக்ஸ் படங்களை ஒழிக்கப்போவதாக கேரளாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று அறிவித்துள்ளது.
Samayam Tamil kerala hackers team declare war against the pornographic content pages in facebook
பேஸ்புக் செக்ஸ் படங்களை ஒழிக்க களமிறங்கியுள்ள கேரள ஹேக்கர்கள் குழு..!


சமீபகாலமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை விபச்சாரம்,செக்ஸ் படங்களை பகிர்தல் போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்பாடுகளுக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க பேஸ்புக் நிர்வாகம் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும்,அவை பலனளிப்பதில்லை.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் ஆபாசப்படங்கள் குறித்த பதிவுகளை வெளியிடும் பேஸ்புக் பக்கங்களை முடக்க உள்ளதாக கேரளாவைச் சேர்ந்த ’கேரளா சைபர் வாரியர்ஸ்’ என்ற ஹேக்கர்கள் குழு அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிவிப்பை ஆபாசப்படங்களை பரப்பும் 59 பேஸ்புக் பக்கங்களில் அந்த குழு பதிவிட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் ஆபாச பதிவுகள் கொண்ட சுமார் 10,000 பேஸ்புக் பக்கங்கள் இயங்கி வருவதாகவும்,அந்த பக்கங்களை முடக்கினாலும் அவை சில நாட்களில் வேறு பெயர்களில் இயங்கத் துவங்கிவிடுவதாகவும் ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது.

28 உறுப்பினர்கள் கொண்ட கேரளா சைபர் வாரியர்ஸ் குழுவினர்,ஆபாச பேஸ்புக் பக்கங்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் நிர்வாண படங்களை பகிரும் அளவிற்கு பலர் வக்கிரமானவர்களாக உலவுவதாக தெரிவித்துள்ளனர்.இதனை பயன்படுத்திக் கொண்டு,அந்த பக்கங்களில் விபச்சாரத்திற்கான விளம்பரங்களும் அளிக்கப்படுகிறதாம்.

இதுமட்டுமல்லாமல் தங்கள் முன்னாள் காதலிகளை ஆபாசமாக சித்தரித்து பல பேஸ்புக் பக்கங்களில் பதிவிடுவதும் கேரளாவில் அதிகரித்து வருவதாகவும் கேரளா சைபர் வாரியர்ஸ் குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பேஸ்புக்கில் பகிரப்படும் ஆபாச பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கேரள காவல்துறையின் சார்பில் ‘ஆபரேஷன் பிக் டாடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஆனால் இது தோல்வியில் முடிந்தது.

Kerala hackers team declare war against the Pornographic content pages in Facebook

அடுத்த செய்தி