ஆப்நகரம்

ஊனமுற்றவரின் 3 ஆண்டு கால போராட்டம்: தனியொருவராக சாலை அமைத்து சாதனை

ஊனமுற்ற நபர் ஒருவர், 3 ஆண்டுகள் தனியொருவராக போராடி சாலை அமைத்துள்ளார்.

TNN 12 Jan 2017, 10:47 am
திருவனந்தபுரம்: ஊனமுற்ற நபர் ஒருவர், 3 ஆண்டுகள் தனியொருவராக போராடி சாலை அமைத்துள்ளார்.
Samayam Tamil kerala man semi paralysed has dug for 3 years finally he has a road
ஊனமுற்றவரின் 3 ஆண்டு கால போராட்டம்: தனியொருவராக சாலை அமைத்து சாதனை


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சசி(59). அவர் தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், சசியின் தோள்பட்டை மற்றும் கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

இதையடுத்து சுய தொழில் தொடங்க திட்டமிட்டு, மூன்று சக்கர வண்டி ஒன்றை கேட்டு, கிராம பஞ்சாயத்தில் மனு கொடுத்தார். மேலும் தன்னுடைய வீட்டின் அருகில் சரியான சாலை வசதி செய்து தரக் கோரியும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் பஞ்சாயத்து சார்பில் எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை. பின்னர் தாமாக முன்வந்து களத்தில் இறங்கி வேலை செய்ய முடிவு செய்தார்.

நாள்தோறும் 6 மணி நேரம் சாலை அமைக்கும் பணியில் தனியொருவராக ஈடுபட்டார். இதையடுத்து 3 ஆண்டுகளில் 200 மீட்டர் தூரம் சாலை அமைத்துள்ளார். இதுகுறித்து சசியிடம் கேட்ட போது, இன்னும் சில நாட்களில் தன்னுடைய முழுமையாக முடிந்துவிடும் என்று கூறினார். மேலும் சாலை அமைக்கும் பணியின் போது, தனக்கு தேவையான பிசியோதெரபி பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.

சசி பற்றி கூறிய அவரது மனைவி, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் சசி முன்வரவில்லை என்றும் கூறினார். தங்களுக்கு ஏராளமான கடன் பாக்கி உள்ளதாகவும், சசி அமைத்த சாலை பற்றி மட்டும் பேசும் சமூகம், தங்களை பற்றி கவலைப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Every day for the past three years, Sashi G has been digging a road outside his home in Kerala. It was not an ordinary task for the 59-year-old coconut climber, who is partially paralysed.

அடுத்த செய்தி