ஆப்நகரம்

கலெக்டருக்கும், எம்.எல்.ஏவுக்கும் டும்..டும்..டும்..!

கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கும் ,துணை கலெக்டர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

TNN 2 May 2017, 8:09 pm
கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கும் ,துணை கலெக்டர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kerala mla going to marry kerala ias officer
கலெக்டருக்கும், எம்.எல்.ஏவுக்கும் டும்..டும்..டும்..!


கேரள மாநிலம் அருவிக்கரா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளவர் சபரிநாதன். இவர் சமீபத்தில் பதிவிட்டிருந்த பேஸ்புக் பதிவு ஒன்றில் கேரள மாநிலத்தில் துணை கலெக்டராக பணியாற்றக் கூடிய திவ்யா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.

”நான் முதன்முதலாக திவ்யாவை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். அப்போது இருவரும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துகள் கொண்டிருப்பது தெரிந்தது. இரு வீட்டாரின் ஆசிர்வாதத்தோடு,திவ்யா எனது வாழ்க்கைத் துணையாக இருக்கிறார்.” என எம்.எல்.ஏ சபரிநாதன் தெரிவித்துள்ளார்.



சபரிநாதன் எம்.எல்.ஏ ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. இவர் கேரளாவின் முன்னாள் சட்டமன்ற சபாநாயகரான ஜி.கார்த்திகேயன் என்பவரது மகன். கடந்த 2015-ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த சபரிநாதன், அருவிக்கரா தொகுதியில் வெற்றி பெற்றார்.

2014-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றி பெற்ற திவ்யா, 2016-ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்ட துணைக் கலெக்டராக இருந்த போது, கேரள தலைப்புச் செய்திகளில் பேசப்பட்டவர். தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திவ்யா இசையமைத்து, பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று, அவரை பிரபலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Kerala MLA going to marry Kerala IAS officer

அடுத்த செய்தி