ஆப்நகரம்

நாக்பூர் ஐஐஎம்-மில் படித்த தையல்காரரின் மகனுக்கு ரூ. 19 லட்சம் சம்பளம்!!

நாக்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த தையல்காரரின் மகன் ஜஸ்டின் ஃபெர்னாண்டசுக்கு ரூ. 19 லட்சம் மாத சம்பளத்தில் ஐதராபாத்தில் வேலை கிடைத்துள்ளது.

Samayam Tamil 19 Apr 2018, 3:29 pm
நாக்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த தையல்காரரின் மகன் ஜஸ்டின் ஃபெர்னாண்டசுக்கு ரூ. 19 லட்சம் மாத சம்பளத்தில் ஐதராபாத்தில் வேலை கிடைத்துள்ளது.
Samayam Tamil நாக்பூர் ஐஐஎம்-மில் படித்த தையல்காரரின் மகனுக்கு ரூ. 19 லட்சம் சம்பளம்!!
நாக்பூர் ஐஐஎம்-மில் படித்த தையல்காரரின் மகனுக்கு ரூ. 19 லட்சம் சம்பளம்!!


கேரளாவில் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஃபெர்னாண்டஸ். வயது 27. கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிப்பு முடித்தார். இந்தப் படிப்பை முடிக்க பணம் இல்லாமல் அரசு கொடுத்த நிதியில் படிப்பை முடித்துள்ளார். பின்னர் எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்று முயற்சித்துள்ளார். முன்னதாக, சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் கோழிக்கோடு ஐஐஎம்.,மில் படிக்க வேண்டும் என்று முயற்சித்துள்ளார். ஆனால், முதல் முயற்சியில் தோல்வியே மிஞ்சியது.

இரண்டாவது முயற்சியில், நாக்பூர் ஐஐஎம்.,மில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு படிப்பை முடித்த அவருக்கு தற்போது, ஐதராபாத்தில் உள்ள வேல்யூ லேப்ஸ்சில் ரூ. 19 லட்சம் மாத சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதுவரை நாக்பூர் ஐஐஎம்.,மில் படிப்பை முடித்தவர்களில் இவருக்குத்தான் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஜஸ்டின் கூறுகையில், ''என்னுடைய தாத்தா தையல்காரராக இருந்தார். இயற்கையாக என்னுடைய தந்தையும் தையல்காரர் ஆனார். ரெடிமெட் தொழிலில் சரிவு ஏற்பட்டு எங்களது வாழ்வும் கேள்விக்குறியானது. எங்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே எங்களது தந்தையால் சம்பாதிக்க முடியவில்லை.

முழுக்க முழுக்க ரேஷனில் வாங்கி தான் எங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்து வந்தோம். எங்களது ஆண்டு வருமானமே ரூ. 50,000 ஆக இருந்தது. எங்களுடைய அத்தைதான் எங்களது கல்வி அவசியத்தை உணர்ந்து 12ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தார்'' என்றார்.

அடுத்த செய்தி