ஆப்நகரம்

மதுரையில் முனியாண்டி விலாஸ் அன்னதானம்

முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கப்பட்டது.

Samayam Tamil 4 Mar 2018, 1:45 pm
முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கப்பட்டது.
Samayam Tamil madurai muniyandi vilas briyani festival
மதுரையில் முனியாண்டி விலாஸ் அன்னதானம்


மதுரையை அடுத்த வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு முனியாண்டி விலாஸ் ஹோட்டல் சார்பில் பிரியாணி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது

ஏராளமான பெண்கள் மாலையில் ஊர்வலமாகச் சென்று பொங்கல் வைத்து முனியாண்டி சுவாமியை வழிபட்டனர். பின், நேர்த்திக்கடனாக 115 ஆடுகள், 360 சேவல்கள் பலியிடப்பட்டன. அவற்றின் இறைச்சியைக் கொண்டு 2 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது.



இரவு முழுக்க நடைபெற்ற பிரியாணி சமைக்கும் பணியில் முனியாண்டி விலாஸ் சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். மறுநாள் காலையில் முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து, பிரியாணி படைக்கப்பட்டது. பின், பிரசாதமாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரியாணி விநியோகிக்கப்பட்டது.

அடுத்த செய்தி