ஆப்நகரம்

ஐ போன் வாங்க 18 மாத மகளை விற்ற தந்தைக்கு சிறை!!

சீனாவில் ஐ போன் வாங்குவதற்காக பிறந்து 18 மாதமே ஆன பெண் குழந்தையை ஆன் லைனில் விற்ற தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 9 Mar 2016, 12:26 pm
சீனாவில் ஐ போன் வாங்குவதற்காக பிறந்து 18 மாதமே ஆன பெண் குழந்தையை ஆன் லைனில் விற்ற தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil man jailed for selling 18 day old daughter online to buy iphone
ஐ போன் வாங்க 18 மாத மகளை விற்ற தந்தைக்கு சிறை!!


கிழக்கு சீனாவில் ஃபியுஜியன் மாகாணத்தை சேர்ந்தவர் 'ஏ மேன்'. இவரை இப்படித்தான் அடையாளப்படுத்தி உள்ளனர். ஐ போன் வாங்குவதற்காக பிறந்து 18 மாதங்களே ஆன தனது பெண் குழந்தையை விற்க ஆன் லைனில் விளம்பரம் கொடுத்தார். ஒருவர் 23,000 யுவான் கொடுத்து அந்தக் குழந்தையை வாங்கியுள்ளார்.

இந்தப் பணத்தில் ஐ போன் மட்டுமின்றி பைக்கும் வாங்க முடிவு செய்துள்ளார். இவரது மனைவி பெரும்பாலான நேரம் பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து வரும்போது, கணவரோ பெற்ற குழந்தையை விற்று இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

அந்தக் குழந்தையை யார் வாங்கினார்களோ அவரது சகோதரியிடம் தற்போது அந்தக் குழந்தை உள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் கீழ் குழந்தையை விற்ற தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி