ஆப்நகரம்

ஏடிஎம்-இல் கிடந்த ரூ. 60 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு!

வல்துறை ஆணையர் விஸ்வநாதன், கேட்பாரற்று கிடந்த பணத்தை நேர்மையான முறையில் போலீசில் ஒப்படைத்த ஆர்கே நகர் செந்திலை நேரில் அழைத்துப் பாராட்டினார்

Samayam Tamil 23 Dec 2018, 10:27 pm
ஏடிஎம் டெப்பாசிட் மிஷினில் கேட்பாரற்று கிடந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசில் ஒப்படைத்தவரை காவல்துணை ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
Samayam Tamil sbi atm 1


சென்னை ஆர்கே நகரைச் சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த வெள்ளியன்று பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது பணம் செலுத்துவதற்கான கேஷ் டெபாசிட் மிஷினில் ஏற்கனவே சுமார் 59,800 ரூபாய் அப்படியே இருந்துள்ளது. இதற்கு முன்பு வந்தவர் பணத்தைப் போட்டுவிட்டு கவனிக்காமல் சென்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த செந்தில், அதனை எடுத்து அருகிலிருந்த எஸ்பிஐ வங்கிக்குச் சென்றார். அப்போது வங்கி பூட்டப்பட்டிருந்தது.

இதனால் செய்வதறியாது தெரியாமல் திகைத்த செந்தில், நேராக அருகிலிருந்த காவல்நிலையத்துக்குச் சென்று நடந்ததைக் கூறி பணத்தை கொடுத்துவிட்டார். இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைவைசாமி தலைமயில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கேட்பாரற்று கிடந்த பணம் அயனாவரத்தைச் சேர்ந்த சுகுமாருக்குச் சொந்தமானது என்றும், தனது உறவினர் ஒருவருக்காக பணத்தை செலுத்தும் போது டெபாசிட் ஆகமல் இருப்பதை கவனிக்காமல் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 59,800 ரூபாய் பணம் சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், கேட்பாரற்று கிடந்த பணத்தை நேர்மையான முறையில் போலீசில் ஒப்படைத்த ஆர்கே நகர் செந்திலை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அடுத்த செய்தி