ஆப்நகரம்

மைனர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு அடி,உதை

வேலூர் மாவட்டம் குறிலப்பட்டி அருகே 17 வயது பெண்ணுக்கு சட்டத்தை மீறி திருமணம் செய்து கொடுக்க முயன்ற வழக்கில் பெண்ணின் தந்தை,அண்ணன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 29 Aug 2017, 12:00 pm
​வேலூர் மாவட்டம் குறிலப்பட்டி அருகே 17 வயது பெண்ணுக்கு சட்டத்தை மீறி திருமணம் செய்து கொடுக்க முயன்ற வழக்கில் பெண்ணின் தந்தை,அண்ணன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil man thrashed for refusing to marry teenager in tamil nadu
மைனர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு அடி,உதை


வானியம்பாடி வெல்லன்கோட்டையைச் சேர்ந்தவர் குமார்(27). இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக திருச்செங்கோட்டிலுள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு சென்ற போது அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் அவரது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடு திரும்பிய குமார், அவரது தாயார் திருமண ஏற்பாடுகள் செய்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். சனிக்கிழமை நிச்சயத்தார்தத்தை வைத்து ஞாயிற்று கிழமை திருமணம் செய்ய முடிவுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் குமார் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சனிக்கிழமையன்று, சக்திபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நிச்சயதார்த்தின் போது மணப்பெண் இன்னும் 18 வயது பூர்த்தி செய்யாதது தெரிய வந்துள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது என்பதை புரிந்து கொண்ட குமார் இரு வீட்டார்கள் வற்புறுத்தியும் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் தந்தை அண்ணாதுரை(47) அண்ணன் பாண்டியன்(26) மற்றும் அவரின் உறவினர்கள் கட்டை மற்றும் பாறையால் குமாரை பயங்கரமாகத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வேலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை செய்த ஆலங்காயம் போலீசார் பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். வழக்கிலிருந்து தப்பித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Man thrashed for refusing to marry teenager in Tamil Nadu

அடுத்த செய்தி