ஆப்நகரம்

”மைனர் சிறுமி கற்பழிப்பு“: குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து..!

மைனர் சிறுமியை கற்பழித்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

TNN 5 Apr 2017, 1:04 pm
மைனர் சிறுமியை கற்பழித்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Samayam Tamil mans 10 year jail term for raping minor lover suspended
”மைனர் சிறுமி கற்பழிப்பு“: குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து..!


கடந்த 2014-ஆம் ஆண்டு சீமா என்ற மைனர் சிறுமி, தன்னை சந்தீப் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பல முறை கற்பழித்ததாகவும், ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு சந்தீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், சந்தீப்பிற்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

“கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மைனராக இருந்திருந்தாலும், இருவரும் ஆழமாக காதலித்துள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடாகவே இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். எனவே இதனை குற்றமாக கருத முடியாது.” என நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தீப்பை 15,000 ரூபாய் செலுத்தி ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Man's 10-year jail term for raping minor 'lover' suspended

அடுத்த செய்தி