ஆப்நகரம்

இன்று உலக ஆமைகள் தினம்!

மே 23ம் தேதியான இன்று உலக ஆமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் பிறந்த தினமாகும்.

TNN 23 May 2016, 4:57 pm
மே 23ம் தேதியான இன்று உலக ஆமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் பிறந்த தினமாகும்.
Samayam Tamil may 23 world turtle day and carl linnaeus birthday
இன்று உலக ஆமைகள் தினம்!


ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும். இவை சுமார் 20 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. இவற்றின் உடல், ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் மூடப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து ஆமைகளை பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2000ம் ஆண்டு முதலாக, மே 23ம் தேதி உலக ஆமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதேபோன்று, மே 23ம் தேதி நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் பிறந்த தினமாகும். 1707ம் ஆண்டு மே 23ல் ஸ்வீடன் நாட்டில் பிறந்தவரான கார்ல் லின்னேயஸ், புதிய மற்றும் தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர் முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் ஆவார்.

அடுத்த செய்தி