ஆப்நகரம்

எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ. 5 கோடி மோசடி!

பெங்களுருவில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Sep 2018, 1:56 pm
பெங்களுருவில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil MBBS seat fraud Over 40 parents cheated of Rs 5 crore


மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்ததையடுத்து, தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வு பயிற்சி என்று தனிக்கட்டணங்கள் வசூலித்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே தனியார் மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்தப்பட்டு மெடிக்கல் சீட் பெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், தற்போது பெங்களுருவில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பு சீட் வழங்குவதாக கூறி 15 பெற்றோர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மெடிக்கல் சீட் பெற்று தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டதாக 15 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு பெற்றோர்களிடம் இருந்தும் சுமார் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் பணம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘மோசடி செய்தவர்கள் அனைவரும் ஒரே கும்பலாக இருக்கலாம். தொடர்ந்து பெற்றோர்களிடம் விசாரித்து வருகின்றோம். அவர்களுடைய மொபைல் நம்பர், எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் இது போன்ற போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்’ இவ்வாறு தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்