ஆப்நகரம்

சாப்பிடும் போட்டியில் நேர்ந்த சோகம்! கேக் தொண்டையில் சிக்கி மாணவி உயிரிழப்பு!!

சாப்பிடும் போட்டியில் நேர்ந்த சோகம்! கேக் தொண்டையில் சிக்கி மாணவி உயிரிழப்பு!!

TOI Contributor 4 Apr 2017, 5:25 pm
அமெரிக்காவில் மருத்துவம் படிக்கும் மாணவி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil medical student dies after choking during eating competition
சாப்பிடும் போட்டியில் நேர்ந்த சோகம்! கேக் தொண்டையில் சிக்கி மாணவி உயிரிழப்பு!!


கொலம்பியா மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த கெய்ட்லின் நெல்சன் (20), கல்லூரியில் நடந்த பான் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டார். போட்டியின் போது இவர் சாப்பிட்ட பான் கேக் தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது. நான்கு துண்டு கேக்களை சாப்பிட முயன்ற போது விழுங்க முடியாமல் அடைத்துக்கொண்டதால் கீழே சரிந்தார். உடனடியாக மருத்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் கெய்ட்லினை காப்பாற்ற முடியவில்லை.

பான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதால் மூச்சுவிட முடியாமல் மாணவி இறந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவியின் மறைவை அடுத்து கல்லூரியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி