ஆப்நகரம்

காணாமல் போய் திருநங்கையாக திரும்பி வந்த மகனைப் பார்த்து கதறி அழுத தாய்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில், காணாமல் போன மகன் திருநங்கையாக திரும்பி வந்ததைப் பார்த்த தாய் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Samayam Tamil 22 Mar 2018, 2:12 pm
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், காணாமல் போன மகன் திருநங்கையாக திரும்பி வந்ததைப் பார்த்த தாய் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Samayam Tamil காணாமல் போன மகன் திருநங்கையாக திரும்பி வந்த சோகம்!
காணாமல் போன மகன் திருநங்கையாக திரும்பி வந்த சோகம்!


சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி, கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மூத்த மகனான ராகுல் (19), கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார். மகன் திடீரென காணாமல் போனதால் வருத்தத்திலிருந்த கலைவாணி, மகனைக் கண்டுப்பிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை கலைவாணி தாக்கல் செய்தார். இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ராகுலை உடனே கண்டுபிடித்து ஆஜர் படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

இதன்பின், ராகுலைத் தீவிரமாக தேடி வந்த போலீஸாருக்கு ராகுல் விழுப்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரத்தில் ராகுல் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த இடத்திற்கு சென்று போலீஸார் விசாரித்தனர். அங்கு, சுமித்ரா என்ற திருநங்கை மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தான் ராகுல் எனவும், தனது உடலில் மாற்றம் தெரிந்ததால் குடும்பத்தை விட்டு தனியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவரை போலீஸார் உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். தனது மகன் வருவார் என்று எதிர்பார்த்திருந்த தாய் கலைவாணி, திருநங்கை ஒருவர் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியா அடைந்தார். தனது மகன் தான் திருநங்கையாக மாறியுள்ளார் என்பதை அறிந்தவுடன் அவர் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதார்.

இருப்பினும் ராகுல் மேஜர் என்பதால், அவரின் விருப்பப்படி நடக்க தடை விதிக்கப்படவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருநங்கை சுமித்ராவுக்கு அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்பின், தாய் கலைவாணி சோகத்துடன் அங்கிருந்து சென்றார்.

அடுத்த செய்தி