ஆப்நகரம்

கேரளாவில் 100% தடுப்பூசி விழிப்புணர்வை வலியுறுத்தும் மோகன்லால்

கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசியை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சுகாதாரத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் கோழிக்கூட்டில் நடந்தது.

Samayam Tamil 11 Aug 2016, 1:02 pm
கோழிக்கூடு: கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசியை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சுகாதாரத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் கோழிக்கூட்டில் நடந்தது.
Samayam Tamil mohanlal to promote awareness on vaccination
கேரளாவில் 100% தடுப்பூசி விழிப்புணர்வை வலியுறுத்தும் மோகன்லால்


இந்த நிகழ்ச்சியில் மலையாள ஸ்டார் மோகன்லால் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோகன்லால், சுகாதாரத்துறை அமைச்சகம் எடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நான் உறுதுணையாக இருப்பேன். ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். அப்படியில்லையென்றால், எளிதில் நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் என்று கூறினார்.

மேலும், கண்டிப்பாக 100 சதகவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கூறினார். மோகன்லாலின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி