ஆப்நகரம்

தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை - அழகு நிலையம் மீது பெற்றோர்கள் புகார்

தலைமுடி கொட்டியதால் மனமுடைந்த மைசூருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 3 Sep 2018, 12:35 pm
மைசூரு : தலைமுடி கொட்டியதால் மனமுடைந்த மைசூருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil neha


குடகு மாவட்டம், விராஜ்பேட்டை, நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நேகா கங்கம்மா (19). இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அவர் விடுதியில் காணவில்லை என அதன் பொறுப்பாளர் போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று செப்டம்பர் 2ம் தேதி காலை லட்சுமண தீர்த்த நதியில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அது நேகா தான் என போலீஸார் உறுதி செய்தனர்.

தலைமுடி கொட்டியதால் விபரீதம்:
போலீஸார் விசாரணையில், நேகா கங்கம்மா தன் தலை முடி கொட்டுவதால் மன வருத்தத்தில் இருந்ததாக தெரிவித்தனர். அவர் மைசூருவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் தன் தலைமுடியை அழகாக வெட்டுவதற்காக சென்றார். அப்போது அந்த அழகுநிலையத்தில் பயன்படுத்தப்பட்ட கெமிக்கலால் தான் அவரின் தலைமுடி கொட்டியதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

அழகு நிலையத்திற்கு சென்றதிலிருந்து அவரின் தலைமுடி கொட்டத் தொடங்கியது. ஆயுர்வேத முறையில் சரி செய்துவிடலாம் என பெற்றோர் ஆறுதல் கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முடி கொட்டுவது தொடர்ந்ததால், மன வேதனையில் வகுப்புக்கு செல்லாமல் நேகா இருந்துள்ளார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அழகு நிலையம் பயன்படுத்திய கெமிக்கல் தான் காரணமாக இருக்கலாம் என நேகாவின் பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி