ஆப்நகரம்

பணம் எடுக்க வரிசையில் நின்ற முன்னாள் காதலனுக்கு அடி உதை!

நாசிக் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க வந்த முன்னாள் காதலனை பார்த்து ஆத்திரமடைந்த பெண், அவரை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 Nov 2016, 8:26 pm
நாசிக் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க வந்த முன்னாள் காதலனை பார்த்து ஆத்திரமடைந்த பெண், அவரை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil nashik woman spots ex lover in bank queue gets him beaten up
பணம் எடுக்க வரிசையில் நின்ற முன்னாள் காதலனுக்கு அடி உதை!


அங்குள்ள திரிம்பாக் நகரை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, இன்று பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வரிசையில் நின்றிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அவரது முன்னாள் காதலி ராதா (23) அங்கே வந்துள்ளார்.

முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்தால், ரொமான்டிக் லுக் விடுவதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். இங்கு நடந்ததோ வேறு கதை. 4 ஆண்டுகளுக்கு முன் திடீரென தன்னை டீலில் விட்டுப் போன கார்த்திக்கை மீண்டும் பார்த்ததால், ராதா பயங்கர ஆத்திரமடைந்தார்.

உடனடியாக, பொது இடம் என்றும் பார்க்காமல், கார்த்திக் மீது பாய்ந்த ராதா, அவரை அடித்து உதைக்க ஆரம்பித்தார். அதோடு விடவில்லை. தனது குடும்பத்தினருக்கும் ஃபோன் போட்டு தகவல் கொடுக்க, அவர்களும் ஓடிவந்து, களேபரத்தில் பங்கேற்றனர்.

பணம் மாற்ற வந்த இடத்தில் எதிர்பாராத அடி உதையால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டார். இதையடுத்து, பொதுமக்கள் தலையிட்டு, சமரசம் செய்தனர். இதுபற்றி சாத்புர் போலீசில் ராதா புகார் அளித்தார். அதில், தன்னை காதலித்து ஏமாற்றியதால், கார்த்திக்கை அடித்ததாகவும் கூறியுள்ளார்.

போலீசாரும் ராதாவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

English Summary:

It was the experience that a 35-year-old man waiting in a queue outside a bank in Nashik must have wished he never had. As he was standing outside a bank on Trimbak Road on Monday, the man was spotted by his alleged ex-lover, a 23-year-old woman.

அடுத்த செய்தி