ஆப்நகரம்

ஆரவாரமின்றி அரங்கேறிய எளிய திருமணம்!

ஆடம்பர திருமணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 நிமிட மந்திர ஆடியோ பதிவுடன் எளிமையான முறையில் தம்பதிகள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

TNN 10 Mar 2017, 6:05 pm
மொரேனா: ஆடம்பர திருமணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 நிமிட மந்திர ஆடியோ பதிவுடன் எளிமையான முறையில் தம்பதிகள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
Samayam Tamil no dj no fere morena couple goes for simple sober wedding
ஆரவாரமின்றி அரங்கேறிய எளிய திருமணம்!


மத்திய பிரதேசம் மாநிலம் மொரேனா எனும் பகுதியில், பூசாரி இல்லாமல், வழக்கமாக செய்யப்படும் சடங்குகள் ஏதும் செய்யப்படாமல், மணமகன்-மணமகள் இருக்கை கூட இல்லாமல் மிகவும் எளிமையாக வெறும் 200 பேருக்கு உணவு வழங்கி திருமண நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியுள்ளது.

இருவீட்டாரும் பேசி முடிவெடுத்து, பாட்டுக் கச்சேரி, ஆடம்பர அலங்காரங்களுக்கு அதிகம் செலவிடாமல் நிதானமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த மணமக்கள், ராம்பால் மஹராஜின் 17 நிமிட திருமண மந்திர பாடல் இசைக்கப்பட்டு முடிந்தவுடன் திருமணமும் நிறைவுற்றது. பிற திருமணங்களை போன்று இல்லாமல் வெறும் 200 விருந்தாளிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டதாக திருமண ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் 'திரு­ம­ணம் கட்­டாய பதிவு மற்­றும் அநா­வ­சிய செல­வு­களை தடுத்­தல்' எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற எளிமையான திருமணங்களை நடத்தி மக்கள் பழக்கப்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.

Amid Centre's move to put a cap on the wedding extravagance, a couple inspired many by sober marriage function which saw marriage getting wrapped up after 17-minute audio, carrying mantras, was played and 200 guests had food.

அடுத்த செய்தி