ஆப்நகரம்

அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்த மருத்துவா்

கொல்கத்தாவில் இறந்துபோன தங்கையின் உடலை தகனம் செய்ய பணம் இல்லாததால் மருத்துவா் ஒருவா் 3 நாட்களாக சடலத்துடன் வாழ்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

TOI Contributor 29 Dec 2017, 3:12 am
கொல்கத்தாவில் இறந்துபோன தங்கையின் உடலை தகனம் செய்ய பணம் இல்லாததால் மருத்துவா் ஒருவா் 3 நாட்களாக சடலத்துடன் வாழ்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil no money to cremate west bengal doctor lives with sisters body for three days
அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்த மருத்துவா்


மேற்கு வங்க மாநிலம், ஹௌரா மாவட்டத்தைச் சோ்ந்தவா் நில்மணி தாரா(70). உடற்கூறு இயல் மருத்துவா். இவருக்கு கரபி, புரவி என்ற இரண்டு சகோதாிகள் இருந்துள்ளனா். இவா்கள் 3 பேருக்கும் திருமணம் நடைபெறவில்லை.

தனியாா் மருத்துவமனையில் பணியாற்றிவந்த நில்மணி மருத்துவமனை நிா்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2006ம் ஆண்டில் இருந்து பணிக்கு செல்லவில்லை. வேலை இழந்த நிலையில், அவா்கள் பிறருடன் சாியாக பழகாமல் தங்களுக்கென இருந்த நிலங்களை விற்று வாழ்ந்துள்ளனா்.

இந்நிலையில் சுரபிக்கு கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை நில்மணி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். ஆனால் மருத்துவ சிகிச்சை பலினின்றி சுரபி அன்று இரவே மரணமடைந்து விட்டாா். இதனைத் தொடா்ந்து சுரபியின் உடலை நில்மணி 25ம் தேதி வீட்டிற்கு கொண்டு வந்தாா்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் இறுதிச்சடங்கு செய்வதற்கான பணத்தை அளித்துள்ளனா். ஆனால் நில்மணி அதனை வாங்க மறுத்துவிட்டாா். உடலும் வீட்டிற்குள் வைக்கப்பட்டது. நில்மணியின் மற்றொரு சகோதாியும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளாா்.

இறுதியில் வீட்டில் இருந்து எழும்பிய துா்நாற்றத்தைத் தொடா்ந்து அருகில் உள்ளவா்கள் புதன் கிழமை காவல்துறைக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த காவலா்களை நில்மணி வீட்டிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. பின்னா் அருகில் இருந்தவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து காவலா்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் காவலா்கள் தங்களது சொந்த செலவில் சுரபியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தகனம் செய்தனா்.

அடுத்த செய்தி