ஆப்நகரம்

ஆபாச படம் பார்த்துக் கொண்டே கார் ஓட்டிய ஓலா டிரைவர்!

பெங்களூருவில் இளம்பெண் முன்னிலையில் ஆபாச படம் பார்த்துக் கொண்டே ஓலா கேப் ஓட்டிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

TNN 27 Aug 2018, 5:03 pm
பெங்களூருவில் இளம்பெண் முன்னிலையில் ஆபாச படம் பார்த்துக் கொண்டே ஓலா கேப் ஓட்டிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil ola


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 22 வயதான இவர், அங்குள்ள ஜேபி நகருக்குச் செல்வதற்காக காலை 6.28 மணியளவில் ஓலா கேப் புக் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஓலா கேப் வந்ததும், திவ்யா காரில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து கார் ஓட்டி வந்த டிரைவர் தேவசமோலியா, தனது மொபைலில் ஆபாச படம் போட்டார். தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா, காரை நிறுத்தும்படி சத்தம் போட்டார். ஆனால், அதை கேட்க மறுத்த டிரைவர் காரை நிறுத்தாமலே சென்றார். பின்னர், திவ்யா குறிப்பிட்ட ஜேபி நகருக்குச் சென்ற அவரை இறக்கி விட்டார்.

தொடர்ந்து அங்குள்ள காவல்நிலையத்துக்குச் சென்ற திவ்யா, ஓலா கேப்பில் நடந்த அட்டூழியங்களை பட்டியலிட்டு புகார் அளித்தார். இதையடுத்து, டிரைவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓலா நிறுவனத்திடமும் தகவல் தெரிவித்தனர். பின்னர், டிரைவர் தேவசமோலியா, வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், தங்களுக்கு வாடிக்கையாளர் நலன் தான் முக்கியம் என்றும் ஓலா கேப் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

அடுத்த செய்தி