ஆப்நகரம்

மீனவர்களின் வலையில் சிக்கிய 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் சுரப்பி!

மீனவர்களின் வலையில் சிக்கிய 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் சுரப்பி!

TOI Contributor 7 Nov 2016, 7:21 pm
துபாய் : 80 கிலோ எடையும் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் சுரப்பி ஓமன் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.
Samayam Tamil omani fisherman found whale vomit
மீனவர்களின் வலையில் சிக்கிய 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் சுரப்பி!


30 வயதாகும் காலித் அல் சினானி எனும் மீனவரின் வலையில் “வேல் வாமிட்” அல்லது அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் சுரப்பி ஒன்று கிடைத்துள்ளது. திமிங்கலத்தின் குடலில் சுரக்கும் அம்பர்கிரிஸ் எனும் சுரப்பி மிகவும் விலை உயர்ந்ததாகும். இந்த சுரப்பி வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கடந்த 20 வருடங்களாக மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் காலித்தின் சிறுவயது ஆசையான கடல் பரிசு இதன் மூலம் கிடைத்துள்ளது. தனது இரண்டு நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற காலித் அம்பர்கிரிஸ் கடலில் மிதந்து வருவதை பார்த்து அதனை வலையில் பிடித்து படகில் சேகரித்துள்ளார்.

முதலில் துர்நாற்றம் வீசிய அம்பர்கிரிஸ் பின்னர் நறுமணம் வீசியதாக கூறுகிறார் காலித். 80 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸை பெட்டியில் சேகரித்து வைத்திருந்து பின்னர் நிபுணர்கள் சிலரை வரவழைத்து அதனை அடையாளம் காண செய்திருக்கிறார். அம்பர்கிரிஸ் விலையை பொறுத்து தன் வாழ்க்கை தரத்தை மாற்ற இருப்பதாக காலித் கூறியுள்ளார்.

அம்பர்கிரிஸ் எவ்வளவு விலை போகிறதோ அதனை மூன்று மீனவர்களும் சமமாக பிரித்து எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஓமன் கடல் பகுதியில் அம்பர்கிரிஸ் அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி