ஆப்நகரம்

கனவுகளை சுமந்து சென்ற டைட்டானிக் கடலில் மூழ்கிய சோகமான நாள்!

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 106 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதன் நினைவு தினம் ஏப்ரல் 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

Samayam Tamil 16 Apr 2018, 4:28 am
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 106 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதன் நினைவு தினம் ஏப்ரல் 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
Samayam Tamil கனவுகளை சுமந்து சென்ற டைட்டானிக் கடலில் மூழ்கிய சோகமான நாள்!
கனவுகளை சுமந்து சென்ற டைட்டானிக் கடலில் மூழ்கிய சோகமான நாள்!


1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, அந்தக் காலத்தில் உலகில் மிகப்பெரிய கப்பலாக கருதப்பட்ட ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

பல்வேறு கனவுகளுடன், சமூகத்தின் பல தரப்பட்ட மக்களை ஒன்றாக சுமந்து சென்ற அந்தக் கப்பல், எந்த சூழலில் உடையாது எனக் கூறப்பட்டது. கனவுகளின் கப்பல் என்றழைக்கப்பட்ட அந்தக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி கனவாகப் போனதுதான் மிகப் பெரிய சோகம்.

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி, சரியாக தனது முதல் பயணத்தை தொடங்கி 5 நாட்கள் கழித்து, அதிகாலை நேரத்தில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பனிப்பாறையின் மீது மோதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. அதில் பயணித்த 2200 க்கும் மேற்பட்ட பயணிகளில் 1500க்கும் மேற்பட்டோர் அந்தக் கப்பலுடனே கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடல் விபத்துகளில் மிகவும் மோசமான ஒன்றாக கருதப்படும் அந்த விபத்தை மையமாக வைத்து, டைட்டானிக் என்ற ஆங்கிலப் படமும் வெளியாகியது. டைட்டானிக் விபத்துக்குள்ளான 106 ஆம் ஆண்டு நினைவு தினத்தில், அதில் கனவுகளை சுமந்து சென்ற மக்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்