ஆப்நகரம்

குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்ட பெற்றோர் : தர்மசங்கடமான நிலையில் மகள்!

குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்ட பெற்றோர் : தர்மசங்கடமான நிலையில் மகள்!

TNN 16 Sep 2016, 5:42 pm
வியன்னா : தனது குழந்தை பருவ புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் பெற்றோர் மீது மகள் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரியாவை சேர்ந்த 18 வயது பெண்ணின் குழந்தைப்பருவ ஃபோட்டோக்களை அவரது பெற்றோர் அனுமதியின்றி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து சுமார் 500 ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ளனர். அவர்களது அக்கவுன்டில் சுமார் 700 நண்பர்கள் உள்ளனர். படுக்கையில் ஆடை இல்லாமல் உட்கார்ந்து இருப்பது போல், கழிவறையில் உள்ள புகைப்படம் என பதிவிட்டுள்ளனர். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட அந்த பெண் புகைப்படங்களை நீக்குமாறு பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்தப்பெண் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil parents posted daughters childhood naked photos on facebook
குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்ட பெற்றோர் : தர்மசங்கடமான நிலையில் மகள்!


பதிவிட்ட புகைப்படங்களால் இளம் பெண் மன உளைச்சலுக்கு ஆளானார் என்று நிரூபிக்கப்பட்டால் அவரது பெற்றோர் வழக்கில் தோற்க நேரிடும் என்று பெண் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவில் இது போன்ற வழக்கு முதல் முறை என்றாலும், வெளிநாடுகளில் இது போன்ற வழக்குகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஃபிரான்ஸில் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 45 யூரோ வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது இந்திய ரூபாயில் 33 லட்சம் மதிப்பாகும்.

அடுத்த செய்தி