ஆப்நகரம்

முன்பதிவு செய்த இடம் கிடைக்கவில்லையா? : ரயில்வே ரூ.75,000 கொடுக்க திட்டம்

நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையோ அல்லது படுக்கையோ உங்களுக்கு கிடைக்கவில்லையெனில் ரூ. 75,000 இழப்பீடு வழங்கப்படும் என்பது போல ரயில்வே அறிவித்துள்ளது.

TNN 5 Jun 2017, 1:00 am
நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையோ அல்லது படுக்கையோ உங்களுக்கு கிடைக்கவில்லையெனில் ரூ. 75,000 இழப்பீடு வழங்கப்படும் என்பது போல ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil passenger whose reserved seat was occupied to get 75000
முன்பதிவு செய்த இடம் கிடைக்கவில்லையா? : ரயில்வே ரூ.75,000 கொடுக்க திட்டம்

விஜய் குமார் என்பவர் கடந்த மார்ச் மாதம் 30, 2013ல் விசாகப்பட்டினத்திலிருந்து, புதுடெல்லிக்கு சென்றுள்ளார். அந்த ரயில் மத்திய பிரதேசத்தின் பினா ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற போது, அவரின் லோயர் பெர்த்தில் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். விஜய் குமார் இது என் படுக்கை என கூறியும் அவர் அந்த இடத்தை விட்டு நகல மருத்துவிட்டார்.

பின்னர் ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் அவர் டிக்கெட் பரிசோதிக்க அங்கு வரவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரூ. 75,000 இழப்பீடு:
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜய் குமார் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதை நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையில் விஜய் குமார் புகார் உண்மை என தெரிந்தது.

இதன் காரணமாக அவர் ரயிலில் பயணித்த போது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத டிக்கெட் செக்கரை கண்டித்து அபராதம் விதித்துள்ளது.
அதோடு விஜய குமாருக்கு ரூ . 75,000 இழப்பீடு வழங்க இந்தியன் ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி