ஆப்நகரம்

மருத்துவமனையில் இருந்து விரட்டப்பட்ட கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி ஒருவர் சாலையில் குழந்தையை பெற்றுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2017, 3:30 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி ஒருவர் சாலையில் குழந்தையை பெற்றுள்ளார்.
Samayam Tamil pregnant woman turned away by hospital gives birth in e rickshaw
மருத்துவமனையில் இருந்து விரட்டப்பட்ட கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாராபூரைச் சேர்ந்த முனாவர் என்ற பெண் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் எந்த சிகிச்சையும் பெறாமலேயே மருத்துவமனையிலிருந்து வெளியேற வற்புறுத்தப்பட்டுள்ளார். இதனால், தன் கணவருடன் ரிக்ஷா வண்டியில் வேறு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, செல்லும் வழியிலேயே வண்டிக்குள் அவர் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

பின்னர், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நள்ளிரவில் நிறைமாத கர்ப்பிணியை வெளியேற்றிய அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி