ஆப்நகரம்

இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவிற்கு இருக்கிறது?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரமாக செயல்படுகிறதா?

TOI Contributor 27 Apr 2017, 6:09 pm
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரமாக செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிக்கை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil press freedom ranking 2017
இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவிற்கு இருக்கிறது?


மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்தளவிற்கு இருக்கிறது என்றால் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்றே கூறலாம். பத்திரிகை சுதந்திரம் குறித்த 179 நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 136வது இடத்தில் உள்ளது. இது, கடந்த ஆண்டு இருந்த பட்டியலில் இருந்த இடத்தை விட 3 இடங்கள் கீழ் இறங்கிவிட்டது.

2002ம் ஆண்டுக்குப் பிறகு பத்திரிக்கை சுதந்திரம் மிகப் பெரும் வீழ்ச்சியை மட்டும் சந்தித்து வருவதாக பத்திரிக்கை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

அடுத்த செய்தி