ஆப்நகரம்

மலையைக் குடைந்து சாலை அமைத்த தாத்தா மரணம்

ராஜஸ்தானின் மலை மனிதர் என்று போற்றப்படும் பாபா பஜ்ரங் தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.

TNN 16 Oct 2017, 6:55 pm
ராஜஸ்தானின் மலை மனிதர் என்று போற்றப்படும் பாபா பஜ்ரங் தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.
Samayam Tamil rajasthans mountain man who carved road through hill dies after prolonged illness
மலையைக் குடைந்து சாலை அமைத்த தாத்தா மரணம்


ராஜஸ்தானின் பண்டியில் உள்ள ஒரு மலையை குடைந்து தானே ஒரு சாலையை உருவாக்கியவர் பாபா பஜ்ரங் தாஸ். 84 வயதான இவர் நீண்ட நாட்களாக வயோதிகத்தால் உடல்நலம் குன்றியிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சைக்காக டெல்லி சென்றார். விமானம் மூலம் சென்ற அவர் டெல்லி சென்றடையும் முன்பே உயிரிழந்தார்.

அவரது உடல் மீண்டும் பண்டிக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்தச்செல்லப்பட்டது. பின்னர், அங்குள்ள நர்சிங் ஆசிரமத்தில் அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

அடுத்த செய்தி