ஆப்நகரம்

பெண்களே உஷார்! ரீசார்ஜ் கடையில் இருந்து உங்களின் செல்ஃபோன் எண்கள் விற்கப்படுகின்றன!

பெண்களே உஷார்! ரீசார்ஜ் கடையில் இருந்து உங்களின் செல்ஃபோன் எண்கள் விற்கப்படுகின்றன!

TOI Contributor 5 Feb 2017, 1:02 am
கடைக்கு ரீசார்ஜ் செய்யவரும் அழகிய பெண்களின் தொலைபேசி எண்களை கடைக்காரர்களே விற்கும் செய்தி எல்லோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil recharge shop selling girls cellphone number to unknown person
பெண்களே உஷார்! ரீசார்ஜ் கடையில் இருந்து உங்களின் செல்ஃபோன் எண்கள் விற்கப்படுகின்றன!


உத்தரபிரதேச மாநிலத்தில் ஏராளமான பெண்கள் காவல்துறையை தொடர்பு கொண்டு, தங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் புகார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 90 சதவீத புகாரில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது என்று தான் கூறியுள்ளனர். பெண்களுக்கு ஃபோன் செய்து நட்புடன் பழக வேண்டும் என்று கூறும் இவர்களிடம், பெண்கள் விருப்பமில்லை என்று சொன்னால் அசிங்கமாக திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் ரீசார்ஜ் கடைக்கு ரீசார்ஜ் செய்யவரும் அழகான பெண்களின் தொலைபேசி எண்ணை, கடைக்காரர்கள் வெளியில் உள்ள ஆண்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மிகவும் அழகாக உள்ள பெண்களின் எண்ணை 500 ரூபாய்க்கும், ஓரளவு அழகாக உள்ள பெண்களின் எண்ணை 50 ரூபாய்க்கும் விற்றுள்ளனர். இந்த தொலைபேசி அழைப்புகளால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த குற்றத்திற்காக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி