ஆப்நகரம்

பெயரை காரணம் காட்டி இளைஞருக்கு மறுக்கப்படும் வேலை!

பெயரை காரணம் காட்டி இளைஞருக்கு மறுக்கப்படும் வேலை!

TOI Contributor 20 Mar 2017, 5:11 pm
ராஞ்சி : தன்னுடைய பெயரை காரணம் காட்டி வேலை மறுக்கப்படுவதாக பட்டாதாரி இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil rejected 40 times by hirers because of his name
பெயரை காரணம் காட்டி இளைஞருக்கு மறுக்கப்படும் வேலை!


ஜாம்ஷெட்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மரைன் இன்ஜினியரிங் படித்தார். படிப்பு முடிந்து 2 ஆண்டுகளான பின்னரும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதுவரை 40 நேர்காணல்களில் பங்குபெற்ற அவர் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு காரணம் அவர் பெயர்தான் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! அவர் பெயர் சதாம் உசேன் (25).

ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனின் பெயர் வைத்திருப்பதால் வெளிநாடு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்பதால் இவருக்கு செல்லும் இடமெல்லாம் வேலை மறுக்கப்பட்டது. இதனால் தன் பெயரை சாஜித் உசேன் என மாற்றினார். பாஸ்போர்ட், ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என்று தன் பெயரை மாற்றினார். ஆனால் கல்விச்சான்றிதழ்களில் சதாம் உசேன் என்ற பெயரே உள்ளது. இதனால் வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இந்நிலையில் கல்விச்சான்றிதழ்களில் தன் பெயரை மாற்றித்தர மத்திய கல்வி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதாம் உசேன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். சான்றிதழ்களில் பெயரை மாற்றக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மத்திய கல்வி வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி