ஆப்நகரம்

ரிமாண்டில் சென்ற கைதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை; அப்படியே எஸ்கேப்பாகி ஓட்டம்!

ரிமாண்டில் சென்ற கைதி, மருத்துவமனையில் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Nov 2017, 7:28 pm
சென்னை: ரிமாண்டில் சென்ற கைதி, மருத்துவமனையில் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil remand prisoner escapes from madurai govt hospital
ரிமாண்டில் சென்ற கைதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை; அப்படியே எஸ்கேப்பாகி ஓட்டம்!


தேனி மாவட்டம் கம்பத்தில் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஐ.சிங்கம்(45). இவர் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இவர் மீது கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சு வலி காரணமாக, ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பொது வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ஏற்கனவே எச்.ஐ.வி பாதிப்புள்ளது.

கடந்த திங்கள் அன்று காலை, கழிவறைக்கு சென்ற சிங்கம், பின்னர் வார்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து மருத்துவமனை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய இடங்களில் தேடி வருகின்றனர்.

Remand prisoner escapes from Madurai govt hospital.

அடுத்த செய்தி