ஆப்நகரம்

CV Raman: ராமன் விளைவை கண்டறிந்த நோபல் விஞ்ஞானி; அறிவியல் ஆசானைப் போற்றுவோம்!

சென்னை: புகழ்பெற்ற விஞ்ஞானி சர் சிவி ராமனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Samayam Tamil 21 Nov 2018, 11:37 am
Samayam Tamil CV Raman
”ஒளி என்பது துகள்களால் ஆனது” என்று ஐசக் நியூட்டன் கூறியிருந்தார். அதன்பிறகு 1801ல் “ஒளி என்பது அலைகளால் ஆனது” என்று தாமஸ் யங் என்ற விஞ்ஞானி கூறினார். இதையடுத்து “ஒளி, வெப்பம் போன்றவை எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

அவை அலைகளாகப் பயணம் செய்கின்றன” என்று கிளார்க் மாக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி கூறினார். இப்படி ஒளி குறித்து பல்வேறு வரையறைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் “ஒளி என்பது திரவம், வாயு, திடப் பொருட்களின் ஊடே செல்லும் போது, அதன் தன்மை மாறுபடுகிறது” என்று சர் சிவி ராமன் வரையறுத்தார்.

இதுவே ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பிற்காக 1930ல், ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 7 நவம்பர் 1888ல் திருவானைக்காவலில் பிறந்தார். இளம் வயதிலேயே இயற்பியலின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

இவரது தந்தை இயற்பியல் மற்றும் கணிதத்தில் விரிவுரையாளராக இருந்தார். 11வது வயதில் மெட்ரிகுலேஷன் வகுப்பை முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார். 13வது வயதில் இடைநிலைக் கல்வியை முடித்த பின் ஸ்காலர்ஷிப் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1904ல் பட்டம் பயின்று தங்கப் பதக்க வென்றார்.

அதே பல்கலைக்கழகத்தில் 1907ல் அதிக மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1929ல் லண்டன் ராயல் சொசைட்டியால் நைட்வுட் பட்டம் வழங்கப்பட்டது. இதேபோல் லெனின் அமைதி பரிசு, பிராங்க்ளின் மெடல் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ல் காலமானார்.

அடுத்த செய்தி